15 ஏப்ரல்க்கான தினசரி வேத தியானம்
பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். லூக்கா நற்செய்தியை 23:46
பிதாவின் திட்டங்களையும் இனி வரப்போகும் ஆசீர்வாதங்களையும் குறித்து நம் இரட்சகர் சகல காரியங்களையும், அவர் சித்தப்படி செய்து பிதாவினிடம் பூரண நம்பிக்கை உள்ளவராக அவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார். கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்கும் நாமும் கூட பிதாவின் பேரில் விசுவாசமுள்ளவர்களாக முடிவு காலம் வரை நம் ஓட்டத்தை ஓட வேண்டியவர்களாக இருக்கிறோம். அவர் தமது ஒரே பேறான குமாரனை நமக்காக இரட்சகராக தந்தருளிய அன்பையும் நம் வாழ்க்கை பிரயாணத்தில் அவர் நம் பேரில் கொண்டுள்ள கவனத்தையும், அநேக விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களையும் உணர்ந்து தைரியத்தோடு அவரிடத்திலே சேர வேண்டியவர்களாயிருக்கிறோம். அவருடைய வாக்குத்தத்தங்களும் நடத்துதலும் நமக்கு பலமும் ஆதரவும் நம்பிக்கையை தரக்கூடியதுமாயுள்ளது. (சங். 31:1-6) Reprints Reference 2475:4 R2475

