21 ஏப்ரல்க்கான தினசரி வேத தியானம்
நம்முடைய பெலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக் கூடா பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்தலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 4:15, 16
நம்முடைய உபத்திரவம் மற்றும் சோதனை நேரங்களில் நம் இருதயத்தை விசுவாசத்துடன் நம்மை இரட்சிக்க வல்லவரிடம் தைரியமாக உயர்த்த வேண்டும். அவரை நேசிக்கிறவர்களின் பேரில் அவர் கொண்டுள்ள அன்பையும், அவர் ஞானத்தையும் நமது ஆபத்து காலத்தில் உதவும் கருணையையும் நாம் உணர வேண்டும். அவரிடம் நாம் ஆலோசனை கேட்கும் போது, நாம் அவருடன் நெருங்கும் சிலாக்கியம் பெற்று ஆபத்துக் காலத்தில் விடுதலை பெறவும், பலப்படவும், சத்தியத்திலே நிலைத்திருக்கவும் செய்து ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நாளும், நம்மை வெற்றி காணச் செய்யும். (எபி.2:13-18) Reprints Reference 2249:5 R2249

