29 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல், உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:23
தேவனுடைய வாக்குத்தத்தங்களே நம்முடைய அஸ்திபாரமாக இருந்து, அதின் மேல் இனி வரும் மகிமைக்குரிய நம்பிக்கையைக் கட்ட வேண்டியவர்களாயிருக்கிறோம். இதனால் சத்தியத்தை எழுத்தின்படி அல்ல, ஆவியின்படி உறுதியாய்ப் பற்றிக் கொண்டு அன்புடன் கைக்கொள்ளக்கடவோம். நாம் எப்பொழுதும் பொறுமையின் முக்கியத்தை உணர்ந்து நமக்குண்டாகும் பல சோதனைகளிலும், கஷ்டங்களிலும், உபத்திரவங்களிலும், சந்தோஷப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். இவை யாவும் நாம் சீர் பொருந்தவும், நற்குணங்களில் முன்னேறவும் தேவனால் அருளப்பட்டதென்றும் உணர வேண்டும். இவைகளாளின்றி அன்பில் நாம் முன்னேற முடியாது. (1 பேது. 4:12-16; 1:5-9) Reprints Reference 2793:3 R2793

