10 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
அன்பு... அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:6
தேவ அன்பு சகலத்திற்கும் மேலானது. இது தன்னயமற்ற சிந்தையுடன் சகலர் பேரிலும் இருக்க வேண்டியது. நான் என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றாமல், அன்பே சகலத்திற்கும் மேலாக காணப்பட வேண்டும். அப்போஸ்தலன் இங்கே எடுத்துக்காட்டும் தேவ அன்பு தேவ ஜனங்களிடையே இருக்க வேண்டிய விசேμத்த ஆவி. இது சில அடிப்படையான கொள்கைகளின் பேரில் வைக்கப்பட்டுள்ளதால், இதில் நாளுக்கு நாள் பலப்பட்டு பூரண அன்பை சத்தியத்தில் காட்ட பிரயாசப்பட வேண்டும். அன்பு பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது. அன்பு நியாயப் பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. உண்மை எது, பொய் எது என்று அறிந்து பிறகு, பொய்யை வெறுத்து, உண்மையைப் பற்றிக் கொண்டு, சத்தியத்தில் வாஞ்சையாயிருக்க வேண்டும். (மத். 22:37-40; 1 கொரி 13:1-8) Reprints Reference 3151:3 R3151

