11 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும் .... கூட்டி வழங்குங்கள். பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 1:5
தேவ ஜனங்களிடையே காணப்படக்கூடிய கடினமான காரியம் யாதெனில், சோதனையின் நேரத்தில் அதை முற்றிலும் எதிர்க்க நினைத்தாலும், சரியானபடி ஒர் நல்ல தீர்மானத்தை அவர்களால் எடுக்க முடிவதில்லை. அநேக சந்தர்ப்பங்களில் இதை நான் இப்பொழுது செய்வதில்லை என்று சோதனைக்காரனிடம் சொல்வதால், சிலகாலம் கழித்து மீண்டும் அவர்களைச் சோதிக்க வருவான். நம்முடைய இரட்சகர் செய்தபடி தைரியத்துடன் சோதனைக்காரனை நம் சமூகத்தினின்று முற்றிலும் நீக்கிவிட வேண்டும். இதன் மூலம் அவன் மீண்டும் நம்மிடம் வர இடங்கொடாமல், “என் தேவன் ஒருவரையே தொழுது கொண்டு அவரையே சேவிப்பேன்” என்று தைரியத்துடன் ஞானமாய்ச் சொல்லக் கூடியவர்களாயிருக்க வேண்டும். (1 பேது. 5:6-10) Reprints Reference 3299:6 R3299

