28 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? யோபு 34:29
கடலின் சடுதியான புயலினால் கொந்தளிப்புண்டாவது போல, நமக்கு ஏற்படக்கூடிய அமளிகளில் சமாதானத்தையும், அமைதியையும் கொடுக்கக் கூடியவர் யார்? “சகலவிதமான ஆறுதலின் தேவனாயிருக்கிறவரே” சமுத்திரத்தில் கப்பலோட்டிகள் ஆபத்திலே உதவிக்காக கதறுவது போல நாம் தேவனிடத்தில் மன்றாடும் போது, தம்மிடம் நமக்கு புகலிடம் தந்து அமைதியிலே வழி நடத்துகிறவராக இருக்கிறார். இந்த சமாதானத்தையும், அமைதியையும் பெற நாம் எப்படிப்பட்ட கூக்குரல் இடுகிறோம். சகல நேரங்களிலும் நாம் ஏறெடுக்கும் ஜெபமல்லவா? நம்மைக் கலங்கப்பண்ணும் சமயங்களில் மட்டுமே இந்த அமைதி நமக்கு அவசியமானது. இது தேவ சித்தத்திற்குட்பட்டதான ஜெபமும் அங்கீகரிப்புமானது. (சங். 46) Reprints Reference 2058:3 R2058

