25 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. யாக்கோபுஎழுதிய திருமுகம் 1:13
பரீட்சை அல்லது சோதனைகளில் வித்தியாசங்கள் உண்டு. பிதாவாகிய தேவன் தம் பார்வைக்கு நியாயமாக எண்ணி விசுவாசத்தைப் பரீட்சிப்பது ஒன்று. சாத்தானின் சோதனை மற்றொன்று. முந்தினது நம் விசுவாசம் தேவன் பேரில் எவ்வளவாக உள்ளதென்பதை பரீட்சிக்கவும் நித்திய ஜீவனைப் பெறவும் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு மிக அவசியமானதும், ஆசீர்வதமுமானதாகும். இதனால் நீதிமான் என்று ஒருவன் தீர்க்கப்படுகிறான். சாத்தானின் சோதனைகளோ, இதற்கு மாறாக சத்தியத்தைப் பொய் என்றும், பொய்யை சத்தியமென்றும் காட்டி ஒளியை இருளாக்கி அநேகரை மரண வழியிலே விழும்படிச் செய்கிறதாக இருக்கும். அநேகர் இவன் வலையிலே சிக்கி இருளிலே நடத்தப்பட்டு வருகின்றனர். இவ்விதமாக தேவன் ஒரு மனிதனையும் சோதிப்பது இல்லை. (மத். 4:1-11; 26:71; 1 கொரி. 10:13) Reprints Reference 3297-5. R3297

