21 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது..... அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். யாக்கோபுஎழுதிய திருமுகம் 1:2
அநேகர் தங்கள் பரீட்சையின் காலம் முடிந்து, தெரிந்து கொள்ளப்பட்டவருடன் சேர்க்கப்பட்டு விட்டோம் என்று எண்ணக்கூடும். ஆனால் பொறுமை, விசுவாசம், நம்பிக்கை இவை யாவும் நம் இருதயங்களைச் சுத்திகரித்து, மிருதுவாக்கி தேவனுக்கு கீழ்ப்படிதலுள்ளவர்களாக்க வேண்டும். பல பரீட்சைகள் அல்லது சோதனைகள் நம க்குப் பல பாடங்களை கற்பிப்பதால், இவைகளில் சந்தோஷப்பட வேண்டும். இவை நம்மை விசுவாசத்தில் பலப்படுத்தி நம் பெலவீனங்களை அறியச் செய்து, சத்தியத்திலே உறுதிப்படுத்தி நம்மைக் காத்து நடக்க உதவும். மேலும் இவை அவர் வழிகளில் ஜீவிக்க அதிக ஆர்வத்தை உண்டாக்கும். (1 பேது. 1:5-7; ரோம.5:1-5) Reprints Reference 3001:5 R3001

