7 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், தேவனுடைய வசனத்தினிமித்தமும், சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமக்களைக் கண்டேன். யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு 20:4
இந்த சிரச்சேதம் உண்மையாயிராமல், பொருள் அர்த்தமுடையதாக இருந்தாலும், வெகு முக்கியத்துவம் வாய்ந்தது. நம் சுயசித்தத்திற்கு, சகல உலக ஆசாபாசங்களுக்கும் நாம் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களாக இது எடுத்துக் காட்டுகிறதாக மட்டுமில்லாமல், தலையாகிய கிறிஸ்துவைத் தவிர வேறெந்த உலகத் தலைகளுக்கும் நாம் கீழ்ப்பட்டவர்கள் அல்ல என்பதையே குறிக்கிறது. தேவன் இவரையே சரீரமான சபைக்கு தலையாக நியமித்துள்ளார். அப்போஸ்தலனான பவுலும் இதே சிந்தையுள்ளவராக நாம் எல்லாரும் கிறிஸ்து என்னும் ஒரே தலையின் கீழ் சரீரமாக ஞானஸ்நானத்தின் மூலமாக இணைக்கப் பட்டுள்ளோம் என்றும், இதுவே அவர் மரணத்துக்குள்ளாகும் ஞானஸ்நானம் என்றும் கூறுகிறார். நம்முடைய சித்தம், நம்முடைய ஜீவியம் முழுவதையும் மரணம் மட்டும் ஒப்புக் கொடுத்து வாழ்வதாகும். (1யோவா. 2:15-17) Reprints Reference 2700:6 R2700

