3 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாமிசமோ பலவீனமுள்ளது. மத்தேயு நற்செய்தியை 26:41
சிலர் விழிப்புள்ளவர்களாயிராமல் ஜெபிப்பதுண்டு. சிலர் விழித்திருந்தும் ஜெபியாமலிருந்து தவறு செய்துண்டு. நம் இரட்சகர் இவை இரண்டையும் ஒன்றுபடுத்தி ஜெபம் செய்யும் முறையை இங்கே உணர்த்துகிறார். நாம் விழிப்புள்ளவர்களாயிருந்து உலகத்திற்கும், மாமிச இச்சைகளுக்கும் நம்மை காத்துக் கொள்ள வேண்டும். விழிப்புள்ளவர்களாக தீர்க்க தரிசன நிறைவேறுதல்களையும், நம் இரட்சகரின் பிரசன்னத்தையும், புதிய பூமியின் மாற்றங்களைக் குறித்தும் அறிய வேண்டும். இவ்விதம் விழிப்புள்ளவர்களாக இருந்து, இடைவிடாமல் ஜெபிக்கவும் வேண்டும். இதன் மூலம் நம்முடைய விசுவாசமும், நம்பிக்கையும், அன்பும், நற்குணங்களும் வலுபெறும். நாம் தேவனுடைய பிள்ளைகளாக சேர்ந்தும், குடும்பங்களிலும், தனிப்பட்ட ஜெபத்திலும் விழிப்புள்ளவர்களாக ஜெபிக்க வேண்டும். (எபே. 6:18- 20; மத். 25:1-13) Reprints Reference 2775:5 R2775

