18 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளையமிறங்கி, அவர்களை விடுவிக்கிறார். திருப்பாடல்கள் 34:7
இவ்வுலகிலே பல இக்கட்டுகளால் நெருக்கப்படும் ஓர் உண்மை கிறிஸ்தவனுக்கு இந்த வார்த்தைகள் எவ்வளவு பெரிய தைரியத்தைத் தரக்கூடியதாக உள்ளது. நாம் பெலனற்றுப் போனாலும், பிசாசின் பல கொடிய செயல்களிலிருந்து தேவன் ஆச்சரியமாக விடுவிப்பார் என்று விசுவாசம் நம்மை பலப்படுத்துகிறது. தேவன் நமது பட்சமாய் இருந்தால், நம்மை ஜெயிப்பவன் யார்? ஏனெனில், “உலகத்திலிருக்கிறவனிலும், உங்களிலிருக்கிறவர் பெரியவர்” என்று அப்போஸ்தலன் கூறியுள்ளார். பரலோக ஆவிகள் தேவ சித்தத்தை நிறைவேற்றுகிறவைகளாதலால், தெய்வீக காரியங்களுக்கு அவைகள் கீழ்ப்படிந்து நமது பாதுகாப்புக்கும் அவைகள் நிறுத்தப்படும். அவைகள் தேவனின் பணிவிடை ஆவிகள். (மத். 18:10; 4:3-11) Reprints Reference 2140:6 R2140

