6 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டி கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. உரோமையருக்கு எழுதிய திருமுகம் 12:1
நமக்குண்டான யாவற்றையும் தேவனுடைய ஊழியத்திற்கென்று கொடுப்பது மிகப் பெரிய காரியம் அல்ல. அது மிக மிகக்குறைவான காணிக்கை. அவர் நமக்குச் செய்த உபகாரங்களையும், கிருபைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் அவருக்கென்று செய்வது மிகக் குறைவானதே. இவ்விதமே நாம் நினைக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். தேவன் நமக்கருளின ஆசீர்வாதங்களையும், மேலான பரிசையும் நாம் அலட்சியமாக எண்ணுவோமேயானால், இது நம் பெலவீனத்தையே காட்டுகிறதாக உள்ளது. நாம் நம்மை முற்றிலுமாக அடக்கிச் சகல உலக சிந்தையையும் விட்டு ஒரு சில காலங்கள் பலியின் ஜீவியத்தில் ஈடுபடுவோமேயானால், நிரந்தரமான சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும், மகிமையையும் கிறிஸ்துவுடன் சதா காலத்திலும் அனுபவிப்போம். (லேவி. 22:21-22; ரோம. 6:8-13) Reprints Reference 2642:5 R2642

