6 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:24
நாம் நம்முடைய ஜீவிய காலத்தை தேவனை குறித்து மற்றவருக்கு போதிப்பதில் செலவழிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும், கிறிஸ்துவுக்குள் இருக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக் உதவியாக நம்முடைய நேரம் மற்றும் பலத்தைக் கொடுப்பதன் மூலமாகவும் தேவனுக்கு ஊழியம் செய்யலாம். நாம் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும், ஊக்கம் அளிக்கும், கடிதங்களை எழுதலாம். சுகவீனப்பட்டு (அ) தனிமைப்படுத்தப்பட்டவர்களைச் சென்று பார்க்கலாம். அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்படியான வேறுவழிகளையும் கண்டுபிடித்து செயல்படலாம். மற்றவருக்கு உதவி செய்வதில் நம்முடைய நேரத்தை செலவிடும் பொருட்டு, நம்முடைய சந்தோஷத்திற்காக நாம் செய்துவரும் காரியங்களை விட்டுக்கொடுக்கும்போது, தேவன் இதை அவருக்காக செலுத்தப்படும் நம்முடைய பலியாக அங்கீகரிக்கிறார். 1 சாமுவேல் 12 : 24

