17 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்கு கட்டளையிடுவார். திருப்பாடல்கள் 91:11
தேவன் அவ்வப்போது தம்முடைய பிள்ளைகளின் “ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிற” அநேக உண்மையுள்ள போதகர்களை எழுப்புகிறார். அநேக ஆத்துமாக்களை கெடுக்கும் கள்ள போதகர்களும் எழும்புவார்கள். ஆகிலும் விசுவாசத்துடன் இவைகள் பகுத்தறியப்படும் போது உண்மை இன்னதென்பதை அறிந்து தங்கள் வழிகளிலே நடப்பார்கள். பவுல் இவ்விதம் செய்ததால் நமக்கு புத்திமதியாக நம்பிக்கையுடன் இருக்க போதித்தார். கர்த்தர், நம் மேய்ப்பர், தம் ஆடுகளுக்காக அக்கரை எடுத்துக் கொள்வார். (எபி. 13:7-17) Reprints Reference 3332:2 R3332

