26 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
யேகோவா அவனை நோக்கி : உன் கையிலிருக்கிறது என்ன என்றார். விடுதலைப் பயணம் 4:2
யாதொருவர் தேவனுடைய ஊழியத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறார்களோ, அவர்கள் அதற்குத் தங்களைத் தகுதியுள்ளவராக முதலாவது உருவாக வேண்டும். இவர்கள் மோசேயைப் போ ல பணிவு, அடக்கம், விடாமுயற்சி, தன்னயமற்ற தியாகம், ஊக்கம் முதலிய குணங்களை மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும். ஒரு நல்ல உக்கிராணக்காரன் தன் சுய திறமையினால் இவைகளை அடையக்கூடியவனாக இருப்பான். தேவன் இதற்காகத் தன்னிடம் ஒரு அற்புதத்தை நடப்பிக்க நினைத்து காத்து தன் நேரங்களை விருதாவாகக் கழிக்க மாட்டான். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் பணிவுடனும், ஆர்வத்துடனும், அன்புடனும் அவர் வல்லமையில் விசுவாசமுள்ளவர்களாக அவருடைய ஊழியத்தில் எவ்விதத்திலும் நம்மை அவர் உபயோகிக்க ஒப்புக் கொடுத்தல் அவசியமானது. (மத். 25:14,15; ரோம. 12:6-8) Reprints Reference 1651:5; 2904:4 R2904

