1 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
யேகோவாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக் கொள்ளும். திருப்பாடல்கள் 141:3
நம்முடைய வார்த்தைகளும், சிந்தனைகளும், எண்ணங்களும் அதிக பலமாகக் காக்கப்பட வேண்டும். இக்காரியங்களில் நாம் அதிக விழிப்புள்ளவர்களாக இருக்கவும் வேண்டும். “ இருதயத்தின் நிறைவால் வாய் பேசும்.” இந்த சத்திய வார்த்தை, குறிப்பாக புதிய சிருஷ்டிகளிடையே எடுத்துக் காட்டப்பட வேண்டும். மற்ற மக்களை விட இவர்கள் தங்களைக் காத்து, உதடுகளினால் பாவம் செய்யாதபடி எச்சரிப்போடு எதையும் பேச வேண்டும். “ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரண புருஷனும், தன் சரீர முழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கி கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்” என்று அப்போஸ்தலன் சொன்ன வார்த்தைகளை இவர்கள் எப்பொழுதும் தங்கள் நினைவில் கொண்டு ஜீவிக்க வேண்டும். (சங். 39:1-3; யாக். 3:2,5-10) Reprints Reference 3305:5 R3305

