1 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 12:6
இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்போரை தேவன் சிட்சிக்கிறார். ஏனென்றால், அவர் அவர்களை கவனித்து வழிநடத்துகிறார். இப்படிப்பட்ட சிட்சைகள் நமக்குள் பொறுமை, விசுவாசம், கீழ்ப்படிதல், நேர்மை போன்ற காரியங்கள் வளர உதவியாய் இருக்கும் என்பதை தேவன் அறிந்திருந்தார். பூமிக்குரிய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு செய்வது போலவே, பிதாவாகிய தேவனும் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு போதித்து, சரிப்படுத்துகிறார். சங்கீதம் 94:12.

