31 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். திருப்பாடல்கள் 63:3
தேவ கிருபையை ருசி பார்த்த ஒவ்வொருவரும், ஜீவனைப் பார்க்கிலும் அவர் தயவு மேன்மையானதென்று உணருகிறவர்களும், தேவனுடைய நற்செய்தியை எடுத்துச் சொல்வதில் களி கூர்ந்து உலக ஆசை, இச்சைகளை முற்றிலும் வெறுக்க வேண்டும். இருளிலிருந்து தங்களை ஒளியினிடத்திற்கு வரவழைத்தவரின் புண்ணியங்களைத் தெரிவிப்பது இவர்கள் முக்கிய காரியமாக இருக்க வேண்டும். இவ்விதம் இந்த நற்செய்தியை ஏற்று அறிவிக்கும் போது பல தொல்லைகள் நேரிடக்கூடும். பணச்செலவு ஏற்படக் கூடும். உலக சினேகிதர்களை இழக்க நேரிடலாம். குடும்பங்களிலும் பல தொல்லைகள் ஏற்படலாம். உலகத்திலிருந்தும், கிறிஸ்துவ மண்டலங்களிலிருந்தும் தொல்லைகள் ஏற்படலாம். ஆகிலும் இவையாவும் நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள நித்திய ஜீவனுக்கு எவ்விதத்திலும் மேலானதல்ல. (பி லி . 3:7-14) Reprints Reference 2852:4 R2852

