8 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
மோசம் போகாதிருங்கள்.... மாமிசத்திற்கென்று விதைக்கிறவன், மாமிசத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன், ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6:7, 8
தன்னலம், அநீதி முதலான மாமிச இச்சைகளை நாம் நம்முடைய இருதயங்களில் விதைத்தோமானால், இது நாளுக்கு நாள் அதிகமாகி கேட்டுக்கு வழி நடத்தி அழிவுக்குள்ளாக்கும். இதுவே இரண்டாம் மரணம். இதற்கு மாறாக, ஆவியிலே மாமிச இச்சைகளை எதிர்த்து ஆவியின் நற் குண இலட்சணங்களை விதைத்தால், இவைகள் நற்கனிகளைத் தந்து, புதிய சிந்தையுடன் ஜீவனுக்குட்படுத்தும். ஆவியின் நடத்துதலால் நற்குணங்கள் பெருகி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் பேரில் விசுவாசத்தை பலப்படுத்தி தேவ இராஜ்யத்தில் பங்குபெறத் தகுதியுள்ளவர்களாக்கும். (கலா. 5:16-23) Reprints Reference 3323:5 R3323

