29 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை .... இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 4:8-10
இயேசுவின் நிமித்தமாகவும், சத்தியத்தினிமித்தமாகவும், தற்காலத்தில் அநேகர் அவமானங்களையும், நிந்தைகளையும், பாடுகளையும், சிரச்சேதங்களையும் அனுபவிக்க வேண்டியவர்களாயிருக்கிறன்றனர். இவற்றை சந்தோஷமாக இக்காலங்களில் அனுபவிப்போர் பெரும் பரிசை தங்களுக்கு முன் வைத்து, அதன் பொருட்டே சகிக்கிறார்கள். நம் இரட்சகரும் இப்படிப்பட்ட பாடுகளை அனுபவித்தார். அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், அவரைப்போல் பொறுமையுடன் சகலத்தையும் அனுபவிக்கவே அழைக்கப்பட்டுள்ளோம். நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மகிமையில் வித்தியாசப்படுவதைப் போல நாமும் மகிமைப்படுத்தப் படுவோம் என்று அப்போஸ்தலர் கூறுகிறார். (1 கொரி. 4:9-14) Reprints Reference 2762:4 R2762

