6 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, மனுஷ குமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். லூக்கா நற்செய்தியை 9:55, 56
இரக்கத்தை விரும்பும் கிறிஸ்துவின் சீஷர்கள் மற்ற மனிதரைக் குறித்துத் தீர்ப்புக் கூறுவதை விட்டு விலகி இருக்க வேண்டும். நாம் எவ்வளவாக தேவனிடம் இரக்கத்தையும், கிருபையையும் பெற விரும்புகிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களிடமும் நாமும் இரக்கத்தை காண்பிக்கவே, தேவன் விருப்பமுள்ளவராயிருக்கிறார். மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடித்து தீர்ப்புக் கூறுகிறவர்கள் இருதயத்தில் பூரணமற்றவர்களாவார்கள். தேவ பிள்ளைகள் தங்களை இதற்குக் காத்துக் கொள்வது அவசியமானது. அவருடைய பிள்ளைகளாயிருக்க இரக்கம், அன்பு, நன்மை செய்தல் போன்ற குணங்களுடைய ஆவியே இன்றியமையாதது. இவை இல்லாதவர்கள், தேவனுடைய பிள்ளைகளாக தொடர்ந்து வாழ முடியாது. (ரோம. 2:1-6) Reprints Reference 3316:4,6 R3316

