22 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? மத்தேயு நற்செய்தியை 20:22
இடுக்கமான பாதையில் சென்ற நம் இரட்சகரின் மன தைரியமான செயல்கள் நம்மை வியப்புறச் செய்கிறது. அவரின் மனப்பக்குவம் எவ்வளவு பலம் வாய்ந்தது. அவர் தம் வழிகளில் அஞ்சாமலும், பின்னிட்டுத் திரும்பாதவருமாய் நடந்தார். தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றித் தம்மை மற்றவர்களுக்குப் பலியாக ஒப்புக் கொடுப்பதே, அவர் வாஞ்சையாக இருந்தது. அவரிலே பணிவையும், ஊழியத்தின் மூலம் வெற்றி அடைந்ததையும் ஒரு முன் மாதிரியாக அப்போஸ்தலர்கள் கண்டார்கள். நாமும் அவருடைய இராஜ்யத்தில் பங்குபெற, அவர் மரணத்திற்குள்ளாக இணைக்கப்பட்டு அவருடைய பாடுகளான பாத்திரத்தில் பங்குபெறவும் வேண்டும். இப்படிப்பட்ட பாடுகள் நமக்கு ஒரு பாடமாக இருப்பதால் நாம் பின்னானவைகளை மறந்து, முன்னான பரிசை நோக்கி பயத்துடன் அல்ல, தைரியத்துடன் ஓடக்கடவோம். (மத். 26:38-42; பி லி . 3:10-14) Reprints Reference 3362:2,5 R3362

