1 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்கும் மட்டும், என் வாயைக் கடிவாளத்தால் அடக்கி வைப்பேன். திருப்பாடல்கள் 39:1
மனித சரீரத்தில் அநேக அவையவங்களில் நாவானது மிகப்பிரதான ஸ்தானம் பெற்றுள்ளதை எவரும் ஒத்துக் கொள்வார்கள். இது நன்மையானவைகளுக்கும், தீமையானவைகளுக்கும் ஏதுவானது. நம்முடைய அனுபவத்தின் மூலம் மற்றெல்லா அங்கங்களைக் காட்டிலும் நாவை அடக்குவது கடினமான காரியமென்பதை நாம் அறிவோம். அநேகர் இதைத் தீமைக்கென்றே உபயோகிக்கிறார்கள். கிறிஸ்தவ ஜீவியத்தில் இதை அடக்கி ஆள விழிப்பும், ஞானமும் மிகுந்த ஜாக்கிரதையும் அவசியமானது. புதிய சிருஷ்டிகளிடையே கிறிஸ்துவின் சிந்தையுடன் தனக்கோ அல்லது பிறனுக்கோ தீமை விளைவிக்காதபடி நாவானது கடிவாளத்துடன் காக்கப்பட வேண்டும். (யாக். 3:3-10) Reprints Reference 2156:3 R2156

