28 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தராகிய தேவனுடைய ஆவி என் மேல் இருக்கிறது. கர்த்தர் என்னை அபிஷேகம் பண்ணினார்..... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்கு சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும் துயரத்திற்குப் பதிலாக ஆனந்தத் தைலத்தையும் கொடுக்கவும் அவர் என்னை அனுப்பினார். எசாயா 61:1-3
தங்களின் பெலவீனங்களையும், குறைகளையும் உணர்ந்து, இவைகளி-ருந்து மீட்பை விரும்பி துயரப்படும் பயந்த ஆத்துமாக்களை கண்டுபிடித்து ஆறுதலளிப்பதற்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். பாவங்களை உலகிலிருந்து நீக்கி இரட்சிக்க வல்லவரான கிறிஸ்துவிடம் அவர்களை வழி நடத்த வேண்டும். அவர் மூலம் தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆசீர்வாதங்களைக் குறித்தும், மரண சாம்பலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதைக் குறித்தும் அறிவிக்க வேண்டும். அநேக இருளான உபத்திரவங்களுக்குப் பிறகு பூரிப்பான காலையைக் காண்போம் என்பதான புதிய பாட்டையும் தேவனுடைய அன்பையும் அவர்களுக்கு வெளிப்படுத்தவும் வேண்டும். (ஏசா. 35:1-10; லூக். 4:18) Reprints Reference 3436:1 R3436

