22 அக்டோபர்க்கான தினசரி வேத தியானம்
முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை எசாயா 65:17
மனுக்குலம் மீண்டும் புத்துயிரளிக்கப்பட்ட பிறகு (அ) மீண்டும் ஜீவனுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, அங்கு புதியதொரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அதாவது, தற்போதையை ஒழுங்கின்மை மற்றும் பாவத்திலிருந்து முழுமையான ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். அச்சமயத்திலும் கூட முற்காலத்தில் இவ்விஷயங்களை ஐனங்களால் நினைவுகூற முடியும். என்றாலும், இராஜ்யத்தின் ஆச்சரியமான பூமிக்குரிய ஏற்பாடுகளுக்கு அவைகள் ஒப்பிடத்தக்கவைகள் அல்ல என்று உணர்ந்து அவைகளை (சிந்தையிலிருந்து) புறம்பே தள்ளிவிடுவார்கள். ஏசாயா 43:25

