9 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:17
புதிய சிருஷ்டிகளுக்குள் தொடர்ந்து போர் இருந்து கொண்டே வரும். ஆவிக்குரியவர்களின் புதிய சிந்தைகள் இவர்களை முற்றிலும் மாமிச இச்சைகளை மேற்கொள்ளச் செய்ய வேண்டும். நாம் மாமிசமாதலால், நம்முடைய ஜீவ கால முழுவதும், இவ்வுலகத்தில் சாத்தானின் பல சூழ்ச்சிகளுக்கு நாம் எதிர்த்துப் போராட வேண்டியவர்களாயிருக்கிறோம். பல உலக இச்சைகளால் நாம் சோதிக்கப்படும் போது, புதிய சிந்தையுடன் அவற்றை எதிர்க்க வேண்டும். சகல பரிசுத்தவான்களுக்கும் இப்படிப்பட்ட போராட்டம் மரண பரியந்தமும் உண்டு. புதிய சிருஷ்டி இதை மரணபரியந்தம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். (எபே. 6:10-18; 2 தீமோ. 4:7-8) Reprints Reference 3275:2 R3275

