12 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு. யோவான் நற்செய்தியை 20:27
விசுவாசமும், நம்பிக்கையும் நம்மிடத்திலே காணப்படாவிட்டால், நம் இரட்சகருடன் நாம் நெருங்கி இருக்க முடியாது. விசுவாசமில்லாமல் அவருடைய நற்குணத்தையும், வல்லமையையும், ஞானத்தையும், அன்பையும் அறியவும் முடியாது. கலிலேயாக் கடலில் புயல் எழுப்பிய போது, விசுவாசமின்றி கதறிய இதே அப்போஸ்தலர்கள், பின்னர் பலப்பட்டு அவர் மறைவிற்குப் பின் பலத்த தைரியத்துடன் செயல்பட்டார்கள் என்பதை அறிகிறோம். அது போலவே நாமும் நம் ஜீவியத்தில் விசுவாசத்தில் பலப்பட வேண்டும். இதை நாம் அனுதின ஜீவியத்தில் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்து அதில் வேர் ஊன்றப்பட்டவர்களாய் காணப்பட வேண்டும். (எபே. 3:16-19; கொலோ. 2:6-9) Reprints Reference 3338:5 R3338

