15 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும். யோவான் எழுதிய முதல் திருமுகம் 2:6
கிறிஸ்துவுக்குள் ஒருவன் நிலைத்திருக்க விரும்பினால், அவர் வழியிலே அவரைப் போல நடக்க வேண்டும். தீமையை விலக்கி, நன்மையானதைச் செய்ய வேண்டும். முடிந்தவரை கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்க வேண்டும். பூரணமற்றவனாக ஒரு மனிதன் அவருடன் நடக்க முடியாது. இயேசு மாமிசத்தி-ருந்து, பூரண மனிதனாக ஜீவித்தார். பரிசுத்தமுள்ளவராகத் தம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத் தம்மை முற்றிலும் மரண பரியந்தம் ஒப்புக் கொடுத்தார். அவரைப் பின்பற்றும் ஒவ்வொருவரும், அவர் நடந்த வழியிலே நடந்து, அவர் சென்ற திசையை நோக்கி அவர் நமக்கு ஆயத்தம் பண்ணின இடத்திற்கு மரண பரியந்தம் நடக்கத் தன்னை ஒப்புப் கொடுக்க வேண்டும். (யோவா. 15:4-11) Reprints Reference 3237:5 R3237

