30 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன். மத்தேயு நற்செய்தியை 28:20
விதை விதைத்ததை மேற்பார்வையிட்டவர், அதன் அறுப்பிலும் கவனமுள்ளவராயிருக்கிறார். சத்தியம் என்ற அரிவாளின் பேரில், நம்பிக்கை வைத்து நாம் காணும் கோதுமை மணிகளை முழுப்பிரயாசையுடன் சேர்க்கவே தேவன் நம்மிடம் விரும்புகிறார். சில கோதுமை மணிகளை கண்டுபிடிப்பது மிகக் கடினமாகக் காணப்பட்டாலும், இவைகளிலே நாம் சந்தோஷப்பட வேண்டியவர்களாயிருக்கிறோம். தேவன் நம்மோடிருக்கிறார் என்றும், அவரது இராஜ்ய சேவையில் கிறிஸ்துவுடன் நாம் ஈடுபடுகிறோம் என்று உணர்ந்து இந்தப் பாடுகள் ஆசீர்வாதத்தை தந்தருளும் என்று விசுவாசித்து முடிவு பரியந்தம் உறுதியாய் ஊழியஞ்செய்ய வேண்டும். (அப். 14:1-7) Reprints Reference 2811:4 R2811

