23 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:36
இங்கே தேவசித்தத்தை நிறைவேற்றுவது மட்டும் நமக்குரிய பரீட்சையாக எண்ணாமல், அவர் சித்தத்தை நிறைவேற்றி வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக் கொள்ள நம் இருதயங்களில் பொறுமையுடையவர்களாக தேவ நீதியை நடப்பிக்க வேண்டும். இதற்குப் பிறகே, தேவ இராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர் என்று தீர்க்கப்படுவோம். யாக்கோபு அப்போஸ்தலன் “ உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்” என்றார். அதாவது, நம் விசுவாசம் பூரணப்பட்டதாக காணப்பட பொறுமை அவசியமான குண லட்சணமாகும். நாம் பொறுமையை கைக்கொள்ளாவிடில், விசுவாசத்தில் தேர்ச்சி பெறாமல், தேவ இராஜ்யத்திற்குத் தகுதியற்றிருப்போம். (யாக். 1:2-4; எபி. 12:1-3) Reprints Reference 2792:1 R2792

