19 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
நாம் தூங்காமல் விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக் கடவோம். தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:6
எப்பொழுதும் நாம் விழிப்புள்ளவர்களாக இருந்து, தேவன் நமக்கு காட்டும் எல்லா வழிகளிலும் நடக்க ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பிரதான ஆசாரியரின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்க விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஆதலால், நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, அந்தகார கிரியைகளுக்கு நம்மை விலக்கி ஒளியின் பிள்ளைகளாக நடக்க வேண்டும். பகலுக்குரியவர்களான நாமோ, தெளிந்தவர்களாயிருந்து விசுவாசம், அன்பு என்னும் மார்க்கவசத்தை தரித்துக் கொண்டிருக்க அப்போஸ்தலன் நம்மை எச்சரிக்கிறார். விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள். புருஷராயிருங்கள், திடன் கொள்ளுங்கள். (1 பேது. 5:8-10) Reprints Reference 3056:5 R3056

