8 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. விடுதலைப் பயணம் 20:7
இந்த நியாயப்பிரமாணம் ஆவிக்குரிய இஸ்ரயேலருக்கு கொடுக்கப்படாதிருந்தும், இதன் ஆவிக்குரிய விளக்கம் எவ்வளவாய் நமக்கு அருளப்பட்டிருக்கிறது என்று உணர வேண்டும். ஏனென்றால், கிறிஸ்துவின் நாமத்தை நம்முடைய நாமமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் அங்கத்தில் ஒருவராக எண்ணப்படுகிறோம். தலையாகிய கிறிஸ்துவின் பரிசுத்த நாமம், சரீரம் முழுவதற்கும் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவின் ஸ்தானாபதியாகவும், பிரதிநிதியாகவும் இந்த உலகிலே ஜீவிக்கிறவர்களாகிய நாம் இதன் மூலம் நாம் பெற்றுள்ள கௌரவம், மதிப்பு, பொறுப்பு இவை யாவையும் காத்து நடக்கக் கடமைப்பட்டுள்ளோம். இதனால் கிறிஸ்துவின் நாமம் விருதாவாக மற்றவர்கள் முன் பேசப்படாதபடி நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். அவருடைய நாமத்திற்கு யாதொரு அவகீர்த்தியும் வர இடங்கொடாமல் ஜீவிக்க முயல வேண்டும். எல்லா செயல்களிலும், வார்த்தைகளிலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். (எசே. 43:7-9; நீதி. 30:8-9) Reprints Reference 3275:2 R3331

