22 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது. திருப்பாடல்கள் 69:9
குளிரான உணர்ச்சியுள்ள ஜனங்கள் சில நல்ல குணங்களை உடையவர்களாயிருப்பார்கள். ஆனால், தேவன் கிருபையுள்ளவர் என்பதை ருசி பார்த்த அவர் பிள்ளைகள் குளிராகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ இராமல், ஆவியில் அனலுள்ளவர்களாகவே காணப்பட வேண்டும். இது அன்பை அதிகரித்து ஆர்வத்தை ஊக்குவிக்கும். இவ்விதம் நம் இரட்சகர் செய்ததால், பிதாவின் நேச குமாரனாக இருந்தார். தேவனுடைய பார்வையில் பிரியமாய் நடக்க விரும்பும் ஒவ்வொருவரும், நீதியின் பேரிலும், சத்தியத்தின் பேரிலும் ஆர்வமுள்ளவர்களாக ஆவியிலே நிரப்பப்பட வேண்டும். இதுவே நாம் நம்மை பட்சிக்கும் பலிகளாகத் தேவனுடைய பலிபீடத்தின் மேல் படைப்பதாகும். இவர்களே கிறிஸ்துவின் மூலம் தேவனுக்குப் பிரியமும், அவரால் அங்கீகரிக்கப் பட்டவர்களுமாயிருப்பார்கள். (சங். 119:137-144; எபி. 3:2-6) Reprints Reference 2289:3 R2289

