13 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு நற்செய்தியை 6:8
நம்முடைய விண்ணப்பங்கள் நம் இருதயத்தின் சுத்திகரிப்பிற்காகவும், ஆவியிலே நிரப்பப்படவும், ஆவிக்குரிய ஆகாரத்தின் மூலம் நம்மைப் பலப்படுத்தவுமே இருக்க வேண்டும். நமக்குத் தேவையான மற்றெல்லா காரியங்களையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் போகிற பாதையை அவர் அறிந்திருக்கிறார். புதிய சிருஷ்டிகளான தம்முடைய பிள்ளைகளுக்கு இன்னது தேவை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். ஆதலால் சகலத்தையும் நாம் அவர் கரத்திற்கு ஒப்புவித்து அவர் நடத்துதலுக்கு காத்திருக்க வேண்டும். அவர் நமக்குச் செய்யாத காரியத்திற்கு தொடர்ந்து தொந்தரவு செய்து கேட்பது அவருடைய வாக்குத்தத்தங்களில் நம்மை நம்பிக்கையற்றவர்களாக காணச் செய்யும். (மத். 6:26-34) Reprints Reference 3338:6 R3338

