16 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். மாற்கு நற்செய்தியை 14:8
நம்முடைய இரட்சகரிடம் நாம் சரீர பிரகாரமாக நெருங்கி இருக்க முடியாது. ஆகிலும் அவர் சரீரமான சகோதரரிடம் நாம் நெருங்கி இருக்கும் போது அன்பு, இணக்கம், சந்தோஷம், சமாதானம் என்னும் வாசனைத் திரவியங்களால் அவர்களை அபிஷேகம் பண்ணக் கடமைப்பட்டுள்ளோம். இன்னும் அதிகமாக நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்துச் சகோதரர்களுக்கு நாம் எதைச் செய்தாலும் அவருக்கே அது செய்யப்பட்டதாக அவரால் எண்ணப்படுவோம். நம் இருதயமே வாசனைத் திரவியம் நிறைந்த பெட்டியாக இருந்து, இதினின்று சுகந்த வாசனையான அன்பு, நல்வார்த்தைகள், இரக்க மனப்பான்மை இவை சகலரிடத்திலும் விசேஷமாக சரீரமான சபையிலே காட்டப்பட வேண்டும். நம் இரட்சகர் இச்சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்றார். (மாற். 12:38-44; மத். 10:40-42) Reprints Reference 2448:5; 2744:3 R2744

