4 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:7
ஒருவனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்து இருவரையும் பிரியப்படுத்த முடியாது. ஒருவரின் விருப்பம் மற்றவரின் விருப்பத்திற்கு மாறாக இருக்கும். அதுபோல, தேவனுக்குப் பிரியமான நீதிக்குரிய காரியங்கள் இப்பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானுக்குப் பிரியமாயிராது. அவன் அநீதியின் தேவன். தேவனுக்கென்று தங்களை பிரதிஷ்டை செய்த ஜனம், பரலோகத்தில் தங்கள் பொக்கிஷங்களை சேர்த்து, தேவனிடத்தில் ஐசுவரியவான்களாக இருக்கிறபடியால், உலக மக்களிடையே புகழ்ச்சியை நாடக்கூடாது. உலகமும், அதன் காரியங்களும் பலியின் ஜீவியத்திற்குரியவை அல்ல. அதன் கிரியைகளின் மூலம் பரலோக இராஜ்யத்தை அடையமுடியாது. (தேவ ஜனம் கிறிஸ்துவைப் போல தேவனையே சேவிக்க முற்றிலும் தங்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்.) (2 கொரி. 8:9; மத். 4:8-10) Reprints Reference 2717:5 R2717

