20 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறி விழுவதில்லை. பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம் 1:10
நாம் பூரணமாகச் சகல காரியங்களையும் செய்து முடிக்கக் கூடாமல், தற்செயலாகப் பல காரியங்களில் குறைவு பட்டவர்களாகவே காணப்படுகிறோம். ஆகிலும் கிறிஸ்துவின் நீதியினால், நம் குறைகள் நிவர்த்தியாக்கப்படுகிறது. விசுவாசத்தோடு கிறிஸ்துவின் நீதி இணைக்கப்படும் போது, சகல கிருபையிலும் நாம் வளர்கிறவர்களாயிருந்து இடறி விழ மட்டோம், இவை யாவையும் நாம் செய்து முடித்தாலும் உபயோகமற்ற ஊழியக்காரராகவே காணப்படுவோம். ஏனெனில், பரிசுத்தம் நமக்கு இன்றியமையாதது. “பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை தரிசிக்கக்கூடாது.” நாம் பாவத்தை வெறுத்து, கிறிஸ்துவின் நீதியிலே வளர்ந்து விசுவாசத்துடன் சகல கிரியைகளையும், பரிசுத்தத்தோடு செய்து முடித்தால், நம் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்துகிறோம். (எபி. 3:1-6) Reprints Reference 2155:6 R2155

