14 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
எச்சரிக்கையாயிருங்கள். நான் போனபின்பு மந்தையைத் தப்ப விடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களில் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும் படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள். திருத்தூதர் பணிகள் 20:28-30
தேவனுடைய ஆலயத்தின் கற்கள் என்பதை நிரூபிக்க சீஷர்களுக்குப் பல பரீட்சைகள், பாடுகளின் மூலம் அவசியமானது. ஏனென்றால், இவைகளை மேற்கொள்பவர்களே, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெறமுடியும். கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புவோர், தாங்கள் அதற்குத் தகுதியுள்ளவர் என்பது முதலாவது நிரூபிக்கப்பட வேண்டும். தேவன் பேரில் விசுவாசம், அவருடைய வார்த்தைகளின் பேரில் நம்பிக்கை, சத்தியத்தில் வைராக்கியம், சகல அவமானத்தையும், பாடுகளையும் சகிக்கும் பொறுமை, மரணபரியந்தம் உண்மையாய் ஜீவித்தல் இவை யாவும் இன்றியமையாதவை. இப்படிப்பட்டவர்களுக்கே 91ம் சங்கீதத்தில் ஆறுதலான ஆசீர்வாதங்கள் கூறப்பட்டிருக்கின்றன. (மத். 7:13-20) Reprints Reference 3331:3 R3331

