24 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
இதனால் நான் தேவனுக்கும், மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். திருத்தூதர் பணிகள் 24:16
நம் மனசாட்சியானது, கடிகாரத்தில் நேரங்கள் குறிக்கப்பட்டுள்ள முகப்புத்தட்டு (Dial)க்கு ஒப்பானது. இந்த முகப்புத்தட்டிலே நேரங்கள் அளவுடன் குறிக்கப் பட்டிருந்தாலும், நேரங்களைச் சரிவர காண்பிக்கும் பொறுப்பு, கடிகாரத்தில் பொருத்தப்பட்டுள்ள முக்கிய கம்பிச் சுருளுக்கே (மெயின் ஸ்பிரிங்) உரியதாகும். இவ்விதமே மன சாட்சியும் நம் இருதயமான மெயின் ஸ்பிரிங்குடன் இசைந்து செயல்படும் போது நீதி எது, அநீதி எது என்று நமக்கு எடுத்து காண்பிக்கக் கூடியதாக இருக்கும். புதிய சிருஷ்டிகள் தேவனுடைய வார்த்தைகளினாலே எச்சரிக்கப்பட்டு, அன்பின் பிரமாணத்துடன் இதைக் கையாளும் போது, நீதி தவறாதவனாய் நடக்கச் செய்யும். (ரோம. 2:12-15; 1 யோவா. 3:18-22) Reprints Reference 2735:1 R2735

