24 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது திருப்பாடல்கள் 136:1
நன்றி தெரிவிக்கத்தக்கதாக தங்களிடம் மிகச்சிறிய அளவிலான விஷயங்களே உள்ளன என்று பலர் உணர்கின்றனர். உண்மையிலேயே உலகப்பிரகாரமான பொருட்கள் ஒன்றுமே இல்லாமலும், அன்பான தேவனை பற்றி ஒன்றுமே தெரியாமலும் இருக்கின்றவர்கள் உள்ளனர். தேவன் எல்லாருக்குமான ஒரு இரட்சகரை அளித்திருக்கிறார் என்பதை அறியும் சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்பட்டப்போகும் காலம் சமீபமாய் இருக்கிறது. அப்பொழுது அவர்கள் தேவனுடைய நன்மையையும், இரக்கத்தையும் அவருடைய அன்பின் அகலத்தையும் உணர்ந்து கொள்வார்கள். சங்கீதம் 106 :1

