5 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்...... உண்மையுள்ள இருதயத்தோடும், விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் 10:21, 22
ஒரு நல்ல காரியத்தைச் செய்ய நினைத்த தேவன் ஒரு போதும் மனம் மாறமாட்டார். ஆகிலும், நம் இருதயம் எப்பொழுதும் அவருடன் ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். நம் விசுவாசம் உறுதியுள்ளதாகக் காணப்பட வேண்டும். நம் சுய சித்தத்தை நிறைவேற்றாமல் அவர் சித்தத்திற்கு நம்மை ஒப்புக் கொடுத்திருக்க வேண்டும். இவ்விதம் நாம் ஜீவிக்கும் போது, விசுவாசத்தின் முழு நம்பிக்கை நமக்கு உண்டாகி, தேவன் தமது வாக்குத்தத்தத்தில் மனம் மாறாதவர் என்று நம்பச் செய்யும். அவர் வாக்குத்தத்தங்கள் மேலானவைகள். நமக்காக பரிந்து பேசி நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியர் நமக்கிருக்கிறார். (எபி. 9:11-15) Reprints Reference 2643:1 R2643

