2 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
அவர் யேகோவா; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக. 1 சாமுவேல் 3:18
நம்முடைய உன்னத வாழ்வுக்கு இன்னது தேவை என்பதை நாம் அறியோம். சில சந்தர்ப்பங்களில் நாம் நலமானதாக எண்ணி விரும்பும் காரியம் நமக்கு நஷ்டத்தை வருவிக்கக் கூடியதாக இருக்கலாம். இவைகளைக் கூர்ந்து கவனித்து, “ தேவன் தம்முடையவர்களை அறிந்திருக்கிறார்” என்றும், அவர் தீர்மானத்தின்படி அவரிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறதென்றும் அறிய வேண்டும். எக்காலத்திலும் நாம் பொறுமையுடன் காத்திருந்து சகலமும் அவராலே நமக்கு அருளப்பட்டு வருகிறதென்று விசுவாசித்து, அவருடைய ஞானத்தையும், அன்பையும், வல்லமையையும் குறித்துக் கேள்வி கேட்காமல் அவருக்குள் அடங்கி இருக்க வேண்டும். அவர் பார்வைக்கு நலமானதையே செய்வாராக. (யோபு 1:18-22; 2:5- 10) Reprints Reference 2806:4; 2888:2 R2888

