27 நவம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
எந்த சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி...... விழித்துக் கொண்டிருங்கள். எபேசியருக்கு எழுதிய திருமுகம் 6:18
நாம் செய்யும் சகல காரியங்களிலும் ஆவியிலே விண்ணப்பம் பண்ண வேண்டும். அதாவது நம் இருதயம் தொடர்ந்து தேவனுடைய வழி நடத்துதலுக்காக காத்து அவருடைய சித்தத்தின்படிச் செய்ய வாஞ்சையுள்ளதாக இருக்க வேண்டும். இதன் மூலம் நாம் அநேக சோதனைகளுக்கும், தவறுகளுக்கும் விலகி நம்மைக் காத்துக் கொண்டு தேவ இராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவர்களாகுவோம். சகோதரரே, சகோதரிகளே, “நீங்கள் சோதனைக்குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று நம் இரட்சகர் சொன்ன வார்த்தைகளை அதிகமாகச் சிந்தித்து பயன்படுத்தி நடப்போமாக. (கொலோ. 4:2-6) Reprints Reference 2775:5 R2775

