1 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக. மத்தேயு நற்செய்தியை 22:39
பிறர் நம்மைத் தீய வார்த்தைகளால் பேசவோ அல்லது தீமைகள் நமக்குச் செய்யவோ, நாம் விரும்பாதது போல, நாமும் பிறரிடம் அவ்விதம் செய்ய விரும்பக்கூடாது. தேவ உடன்படிக்கைக்குட்பட்ட சகலரும் தேவ கட்டளைப்படிப் பிறனை ஒரு வார்த்தையாலும் அவநம்பிக்கைக்கு உட்படுத்தவும் கூடாது. அவ்விதம் சில சந்தர்ப்பங்களில் சிந்திக்க ஏவப்படும் போது, நம்முடைய புதிய சிந்தை அதை மேற்கொண்டு அப்பாவத்தை நடப்பியாதபடி நம்மைக் காத்துக் கொள்ளுதல் அவசியமானது. சந்தேகத்திற்கு இடம் கொடாமல், அன்பினிமித்தமாகச் சகல தீய எண்ணங்களையும் விட்டு விலக வேண்டும். (அன்பு சகல பாவங்களையும் மூடும். அன்பு மாயமற்றது. அன்பு சமாதானத்தைக் கட்டளையிடும்.) (1 கொரி. 13:1-7) Reprints Reference 2445:3 R2445

