6 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
0:00 / …
தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த, பாழான பட்டணம் போலிருக்கிறான். நீதிமொழிகள் 25:28
கிறிஸ்தவ ஜீவியத்தில் “சுயநலம்” என்ற சிந்தையை எதிர்த்துப் போராடுவது ஒரு பெரும் போராகும். தேவனுடைய வார்த்தையின்படி “பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” ஏனெனில் தன் மனதை அடக்கி நான் என்ற சிந்தையை எதிர்த்து அனுதினமும் போர் புரிய வேண்டியவர்களாயிருக்கிறோம். இதன் மூலம் பாவத்தை எதிர்த்து நம் கண்களிலிருந்து மன மேட்டிமை, கோபம், பகை, விரோதங்கள் முதலியவைகள் நம் இருதயத்தில் தோன்றாமல் இருக்கச் செய்யலாம். சகல பாவ சிந்தைகளையும் நாம் எதிர்த்துப் போராடும் போது சகோதர சினேகத்திலும், பிறனுக்கு உதவி செய்வதிலும், மற்றவர் பெலவீனங்களில் உதவவும் தயாராவோம். (நீதி. 14:29; 1 கொரி. 6:12) Reprints Reference 2878:1 R2878

