8 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். யோவான் நற்செய்தியை 15:18
எவ்வித காரணமுமின்றி நம் இரட்சகர் உலகத்தாரால் பகைக்கப்பட்டது போல, முடிந்த வரை இது நமக்கும் இருக்கும் என்று நினைப்போமாக. பகைமை, வெறுப்பு. தூஷணம் இவை யாவும் நம் மேல் பொழிந்தாலும், நம் ஜீவியம் பரிசுத்தமும், நீதியை நடப்பிக்கிறதுமாயிருக்கப் பிரயாசைப் படவேண்டும். கூடுமானவரை நம்முடைய எண்ணங்களும் வார்த்தைகளும், செய்கைகளும் தேவ நாமத்திற்கு மகிமையாகவும் எல்லா மனிதரிடமும், விசேஷமாகச் சகோதரரிடமும் அன்பை காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும். திருச்சபை பூரணப்பட்டு ஆளும் போது நம்மை வெறுத்தவர்கள், நமக்குமுன் தலை வணங்கி நிற்பார்கள். நாமும் அவர்கள் பூரண நிலையைப் பெற உதவ வேண்டியவர்களாயிருப்போம். (மத். 5:11-12) Reprints Reference 2881:1 R2881

