8 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
பவுல், புறஜாதிகளுக்கு ... என்னுடைய (இயேசு) நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறார் திருத்தூதர் பணிகள் 9:15
யூதாஸ், தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட பிறகு, மீதமிருந்த அப்போஸ்தலர்கள் அவர்களுடைய எண்ணிக்கையை நிறைவு செய்யும் பொருட்டு, ஒரு மாற்று நபரை தேர்ந்தெடுத்தனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மத்தியாஸ் (அப்போஸ்தலர் 1:23-26). அதன் பிறகு அவர் மீண்டுமாக எங்குமே குறிப்பிடப்படவில்லை. பவுலே, தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறவர் என பேசப்படுகிறார். ஆகையால், இவரே பன்னிரண்டாவது அப்போஸ்தலராக மாறினவர் என நாம் விசுவாசிக்கிறோம். மற்ற அப்போஸ்தலரில் ஒவ்வொருவரும் கூட மனுஷரால் தேர்ந்தெடுக்கப்படாமல், தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இயேசு தம்முடைய அப்போஸ்தலரை குறித்து கூறும்போது, பிதாவினால் தமக்கு கொடுக்கப்பட்டிருப்பவர்கள் என்கிறார். ரோமர் 1:1

