22 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக் கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 2:21
ஒருவன் தேவனிடம் கனத்தை அடைய விரும்பினால், தேவன் தன்னை நடத்தச் சித்தமான வழியைப் பணிவுடன் தேடக் கடவன். தாழ்ந்த சிந்தையுடையவனுக்கு தேவன் தம் தயவை காண்பிக்கிறார். நீ தேவனுக்கு உகந்த பாத்திரமாக இருப்பாயானால், கனத்திற்குரியவனாகவும் இருப்பாய். ஏற்ற காலத்தில் அவர் உன்னை உயர்த்தும்படி அவருடைய பலத்த கைகளுக்குள்ளாக அடங்கி இரு. இதிலே பொறுமையுடன் இருந்து, உன் கைக்கு நேர்மையாக காணப்படுவதெதுவோ, அதை உன் முழு மனதுடன் செய். மண்பாண்டமான உன் சரீரம் சுத்தமுள்ளதாகவும், தேவன் உபயோகிக்க பாத்திரமுள்ளதாகவும் இருப்பதாக. இது தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றதாகும். (மத். 20: 25-28; 1 கொரி. 6:9- 20) Reprints Reference 3097:5 R3097

