7 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
அவர் வையப்படும் போது பதில் வையாமலிருந்தார். பேதுரு எழுதிய முதல் திருமுகம் 2:23
அவருடைய பகைவர்கள் அவரிடம் குற்றம் கண்டு பிடித்ததால், அவரை நியாயமாக வையவில்லை, அல்லது அவரை வையாதவர்கள் எவ்வித குற்றமற்றவர்களாகவும் இருந்ததில்லை. இயேசு அவர்கள் பேரில் எவ்வளவோ குற்றங்களைச் சுமத்தி இருக்கக்கூடும். ஆனால் தம் பிதாவின் சித்தத்தை அறிந்தவராகத் தம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்து அந்த ஜனங்களிடம் எதிர் பேசக் கூடாதவராகத் தம்மை அடக்கிக் கொண்டார். தாம் அழைக்கப்பட்ட அழைப்பை அறிந்து, பொறுமையுடன் சகல நிந்தைகளையும் சகித்தார். அவர் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டார். அந்த ஜனங்களின் அறியாமையையும், குருடர்களாய் இருப்பதையும் அறிந்த அவர், அவர்கள் பேரில் தான் கொண்டிருந்த அன்பினிமித்தமாகச் சகலத்தையும் சகித்தார். (யோவா. 15:18-23) Reprints Reference 2879:4 R2879

