6 டிசம்பர்க்கான தினசரி வேத தியானம்
செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய் சபை உரையாளர் 9:10
மோசே தான் தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை இஸ்ரயேலர் நம்பமாட்டார்கள் என்று கூறின்போது, கர்த்தர், உன் கையில் இருப்பது என்ன? என்று அவரிடம் கேட்டார். தேவன், இஸ்ரயேலை எகிப்திலிருந்து விடுவிக்கும் பொருட்டு, மோசேயின் கரத்திலிருந்த தடியை, அற்புதங்கள் நிகழ்த்த பயன்படுத்தினார், அநேக நாட்களுக்கு பின்னர், தொற்காள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீ, சபையில் உள்ள சகோதர சகோதரிகளுக் வஸ்திரங்கள் தைக்க அவருடைய கரங்களில் இருந்த ஊசியையும், நூலையும் பயன்படுத்தினார். தேவன், நமது நிமித்தம் மாபெரும் அற்புதங்கள் நிகழ எதிர்ப்பார்ப்பதில்லை, மாறாக அவருடைய பணியை செய்வதில், நம் கரங்களில் நாம் பெற்றிருப்ப எதுவோ அதையே பயன்படுத்த விரும்புகிறார். யாக்கோபு 2:17

